அஸ்வினி நட்சத்திரம்
வான
மண்டலத்தில் காணப்படும் அஸ்வினி நட்சத்திரம் என்பது 6 நட்சத்திரங்களை கொண்ட ஓரு
சிறு கூட்டமாக உள்ளது. குதிரை தலை போன்ற வடிவத்தில் காணப்படும். 27 நட்சத்திரங்களில் அஸ்வினி நட்சத்திரம், முதலாவது
ஆகும்.
அஸ்வினி நட்சத்திரம் பெயர் காரணம்
இது
உறுதியான நிலைப்பாட்டைக் குறிக்கிறது. இதில் பிறந்தவர்கள் உறுதியான செயலும்,
எண்ணமும் கொண்டவர்களாக இருப்பார்கள். மிகவும் சுறுசுறுப்பானவர்கள். இந்த
நட்சத்திரத்தின் 4 பாதங்களும் மேஷம் ராசியிலேயே உள்ளது
அஸ்வினி
நட்சத்திரம் – சில குறிப்புக்கள்
இந்த
நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய தெய்வம், அஸ்வினி குமாரர்கள் ஆவர்.
இவர்கள் தேவர்களின் மருத்துவர்கள் ஆவார். இந்த நட்சத்திரத்தின் அதிபதி கேது பகவான்
ஆவார்.
இது
ஓரு ஆண்பால் நட்சத்திரமாகும். இது குதிரைத் தலையை போன்ற தோற்றம் கொண்டது. விரைவாக
கிரகிப்பது இதன் பிரதான சக்தியாகும்.
இது
வைசியர்கள் என்னும் பிரிவின் கீழ் வருகிறது. வைசியர் என்ற சொல் வியாபாரிகளைக்
குறிக்கிறது. இந்த நட்சத்திரம் தேவ கணமாகும். இதில் பிறப்பவர்கள் தேவர்களைப் போன்றவர்களாக
கருதப்படுகிறார்கள். இது சத்வ குணம் அதாவது நேர்மறை எண்ணத்தைக் குறிக்கிறது.
நமது
உடலில் உள்ள தலை மற்றும் முட்டிகளை இந்த நட்சத்திரம் ஆட்சி செய்கிறது. இந்த
நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாத உடம்பைக் கொண்டவர்களாக இருப்பார்கள். இது பஞ்ச
பூத தத்துவத்தில் பூமியைக் குறிக்கிறது. இதற்கான பறவை கருடன்.
இந்த
நட்சத்திரத்தின் அதிர்ஷ்ட எண்கள் 7 மற்றும் 9 ஆகும். இந்த நட்சத்திரத்தின்
அதிர்ஷ்ட எழுத்துக்கள் ச மற்றும் ல
ஆகும். அதிர்ஷ்ட கல் வைடூரியம் ஆகும். அதிர்ஷ்ட நிறம் கருப்பு ஆகும்.
.
ஓவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஓரு மரம் குறிப்பிடப்பட்டுள்ளது. அவ்வகையில் இதற்கான
மரம் எட்டி மரம் ஆகும். இந்த மரத்தை இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்
வளர்ப்பதால் ஏற்படும் நன்மைகள் பல உண்டு. அந்த மரம் எவ்வாறு வளர்கிறதோ அவ்வாறே
இவர்களுடைய வளர்ச்சியும் பல மடங்கு வளரும்.
பொதுவான
குணங்கள்
அஸ்வினி
நட்சத்திரத்தில் பிறந்த இவர்கள், அழகான தோற்றம் கொண்டவர்கள். புத்திசாலியாக
இருப்பார்கள். அமைதியானவர்கள். தங்களுக்குக் கொடுக்கப்பட்ட வேலைகளை மிகத்
திறமையாகவும், நேர்த்தியாகவும் செய்வபர்கள். ஜோதிடத்தில் அறிவும், நம்பிக்கையும்
உடையவர்கள்.
உண்மையை
பேசுபவர்கள். சந்தோஷமான வாழ்வை விரும்புபவர்கள். உற்றார், உறவினர் மற்றும்
நண்பர்களிடத்தில் நல்ல முறையில் பழகுபவர்கள். நேர்த்தியான உடைகளை உடுத்தி வசீகரமான
தோற்றத்தை வெளிப்படுத்துவபர்கள். ஆபரணங்கள் அணிய விருப்பமுள்ளவர்கள். அழகான தோற்றத்தில்
காணப்படுவார்கள்.
சில
சமயம் கோபத்தை வெளிப்படுத்துவார்கள், ஆனால் அது யாரையும் பாதிக்காத அளவில்
இருக்கும். நாட்டுப்பற்று மிக அதிகம். அனைவராலும் விரும்பப்படுவார்கள். கொடுத்த
வேலையை உண்மையாகவும், நேர்த்தியாகவும் முடிப்பதில் வல்லவர்கள்.
அகன்ற
மார்பும், உயர்ந்த நெற்றியும், சிவந்த கண்களை உடையவர்கள். தாம் இருக்கும் இடத்தில்
புகழ் பெற்றவர்களாக இருப்பர்.ஆன்மீகத்தில் நாட்டம் கொண்டவர்கள். தனது மதத்தில்
நம்பிக்கை உள்ளவர்கள். வாதிடுவதில் வல்லவர். சுதந்திரமான மனப்போக்கு கொண்டவர்கள். பயணத்தில்
விருப்பம் அதிகம் உண்டு.
மிக
முக்கியமான பண்புகள்
தியாக
மனப்பான்மை
குறிக்கோள்களுடன்
வாழ்பவர்கள்
தத்துவவாதி
தொழில்
மனநல
மருத்துவர்கள்
பொது
சிகிச்சை நிபுணர்கள்
பொது
நல மருத்துவர்கள்
நம்பிக்கை
மூலம் குணப்படுத்தும் வல்லுனர்கள்
இசைக்
கலைஞர்கள்
அஸ்வினி நட்சத்திர கோயில்
1. அருள்மிகு
பிறவி மருந்தீஸ்வரர் கோயில்
மூலவர்
அருள்மிகு
ஸ்ரீ பிறவி மருந்தீஸ்வரர்
அம்மன்
ஸ்ரீ
பெரிய நாயகி அம்மன்
இடம்
திருத்திறைப்பூண்டி,
திருவாருர் மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா.
கோயில்
2. அருள்மிகு
தர்பரணேஸ்வரர் கோயில்
மூலவர்
அருள்மிகு
ஸ்ரீ தர்பரணேஸ்வரர்
அம்மன்
ஸ்ரீ
பிராணஸ்வரி அம்மன்
இடம்
திருநள்ளாறு,
காரைக்கால், பாண்டிச்சேரி, தமிழ்நாடு, இந்தியா.
அஸ்வினி
பெண்களின் பொதுவான குணங்கள்
கவர்ந்து இழுக்கக்கூடிய அழகைக் கொண்டவர்கள்.
இனிமையாக பேசுபவர்கள். மற்றவர்களால் விரும்பக்கூடியவர்கள். அமைதியான இயல்பு
உள்ளவர்கள். தூய்மையான மனம் கொண்டவர்கள். பாரம்பரியத்தை பின்பற்றி வாழ்பவர்கள்.
நாகரீகமும் சற்று பிடிக்கும். பெரியவர்களிடத்தில் மரியாதைக் கொண்டவர்கள்.
தான் வேலை செய்யும் இடத்தில் தலைவியாக
இருப்பதில் விருப்பம் கொண்டவர்கள். தனது வேலைகளை ஆத்மார்த்தமாக செய்வார்கள்.
போதுமான அளவு செல்வம் சேர்த்த பின்பு வேலையை விட்டுவிடுவார்கள். பொது காரியங்களில்
ஈடுபடுவதில் விருப்பம் உள்ளவர்கள். குடும்பத்தினருடன் அதிக நேரம் செலவிடுவத்தில்
மிகவும் விருப்பம் கொண்டவர்கள். தனது குடும்பத்திற்காக செல்வம் சேர்ப்பார்கள்.
23 வயதிற்கு மேல் 26 வயதிற்குள் திருமணம்
செய்து கொள்வது நல்லது. அவ்வாறு நிகழாமல் போனால் சிறு சிறு பிரச்சனைகள் உருவாகக்கூடும்.
திருமண வாழ்வு சிறிது போராட்டமாக மாறும். இது மனமுறிவுக்கு இட்டுச்செல்லும் அல்லது
கணவரின் பிரிவு நிகழும். விவாகரத்து ஏற்படலாம். இது காதல் திருமணத்திற்க்கும்
பொருந்தும்.
இவர்கள் தனக்கு ஏற்படும் கவலைகள் மற்றும்
பிரச்சனைகளை விட்டு வெளியே வந்து சந்தோஷமாக வாழக்கூடியவர்கள். இவ்வாறு வெளியேறாவிட்டால்
இவர்களது மூளையின் செயல்பாடு குழப்பமாக மாறும். நெருப்பு சம்மந்தமான வேலைகளில்
இவர்கள் மிக எச்சிரிக்கையாக இருக்க வேண்டும். அதாவது சமைக்கும் போது. வாகனத்தை ஓட்டுவதில்
அதிக கவனம் வேண்டும்.
வேலை
மற்றும் தொழில்
தலைமை
நிர்வாகி
பொருத்தம்
தனது
தந்தை மற்றும் சகோதரர் மீது அதிக பாசம் கொண்டவர்கள்.
அஸ்வினி ஆண்களின் பொதுவான குணங்கள்
அழகான முகம் மற்றும் கண்களை கொண்டவர்கள்.
ஓளிமயமான கண்கள் உண்டு. பெரிய நெற்றி இருக்கும். உண்மையானவர்கள். தன்னை
விரும்புவர்களுக்காக எதை செய்யக்கூடியவர்கள். இவர்கள் உண்மையான நட்பிற்கு
இலக்கணமாக திகழபவர்கள். எந்த இக்கட்டான சூழ்நிலையிலும் நிதானம் இழக்காதவர்கள்.
கோபம் வராது, அப்படி வந்தால் இவர்களை
கையாளுவது கடினம். அறிவுரை சொல்லுவதில் நிபுணர். இவர்களது வழிகாட்டுதலை
பின்பற்றினால் வெற்றி நிச்சயம். இவர்களால் தன்னைப் பற்றிய விமர்சனங்களை ஏற்க
முடியாது. அதை அனுமதிக்க மாட்டார்கள்.
செய்யும் அனைத்து செயல்களிலும் நிபுணராக
விளங்குவார்கள். இசை ஆர்வம் அதிகம். 30 வயது வரை சற்று போராட்டமான சூழலே
இருக்கும். பிறகு படிப்படியாக முன்னேறுவார்கள். செல்வம் சேர்க்க முடியாதவர்கள்,
செலவாளி.
பிடிவாத குணம் கொண்டவர்கள். குடும்பத்தில் இந்த பிடிவாத
குணத்தால் பிரச்சனைகள் சற்று எழலாம். தனது தந்தையுடன் சுமூகமான போக்கு இருக்காது.
எந்த நன்மையும் தந்தை மூலம் கிடைக்காது. தாய் மாமன் மற்றும் நண்பர்கள் இவர்களுக்கு
உதவிக்கரம் நீட்டுவார்கள். இவர்களுக்கு பெண் பிள்ளைகளை விட ஆண் பிள்ளைகளே அதிகம்
பிறக்கும்.
நல்ல ஆரோக்கியம் என்பது இவர்களுக்கு
இயற்கையிலேயே உண்டு. இருமல், சளி தொந்தரவு ஏற்படலாம். வயது முதிர்ந்த காலத்தில்
மூட்டு வலி, செரிமான கோளாறு, மற்றும் லேசான நெஞ்சு வலி ஏற்படலாம். கவனம் செலுத்தி,
தகுந்த மருத்துவரிடம் ஆலோசனை பெருவது நலம்.
தொழில்
சொந்தமாக தொழில் செய்யலாம்
இசைத்துறை
இலக்கியத்துறை
தத்துவத்துறை
பொருத்தம்
தந்தையுடன் பொருத்தம் குறைவு
மனைவி, தாய் மாமன், நண்பர்கள் உறவு நன்மையாக இருக்கும்.
அஸ்வினி நட்சத்திர
பாதங்கள்
முதல் பாதம் – செவ்வாய் – மேஷம்
அந்நியர்கள் மேல் அன்பு கொண்டவர்கள்.
பாவத்திற்கு அஞ்சாதவர்கள்
கோள் சொல்பவர்கள்
ஆடம்பரம் இருக்கும்
முகப் பொலிவு குறைந்து காணப்படும்
இரண்டாம் பாதம் – சுக்கிரன் – மேஷம்
மேலான அறிவுடையவர்கள்
அழகானவர்கள்
பிறர் குணங்களை அறிந்தவர்கள்
சாஸ்திர உணர்வுடையவர்கள்
மூன்றாம் பாதம் – புதன் – மேஷம்
நற்புத்தி கூறுபவர்கள்
இனிமையாக பேசுவர்
ஜோதிட சாஸ்திரத்தில் ஈடுபாடு உண்டு
கணித சாஸ்திர அறிந்தவர்கள்
நான்காம் பாதம் – சந்திரன் - மேஷம்
உண்மை பேசுபவர்கள்
விவேகம் நிறைந்தவர்கள்
சபலம் உண்டு
ஜோதிட அறிவு இருக்கும்
ஆசை அதிகம்
அடுத்த நட்சத்திரம் >> பரணி
நட்சத்திரம்
உங்கள் பிறந்த நட்சத்திரம் பற்றி அறிய, உங்களது பிறந்த தேதி,மாதம்,வருடம் ஆகியவற்றை எங்களுக்கு அனுப்புங்கள்.
இணைப்பு - Contact us