நடுநாட்டு
திவ்ய தேசங்கள் - 2
41. திருவஹீந்திபுரம்
அயிந்தை, கடலூர் - தமிழகம்.
கடலூரிலிருந்து 3 கிமீ தூரத்தில் உள்ளது.
1000 - 2000 வருடங்கள்
பழமையான திருத்தலம்.
மூலவர்
ஸ்ரீ தேவநாதப் பெருமாள்
உத்சவர்
ஸ்ரீ அச்சுதன்
தாயார்
ஸ்ரீ ஹேமாம்புஜவல்லி
ஸ்ரீ செங்கமல நாச்சியார்
தீர்த்தம்
கருடாநதி
சந்திர தீர்த்தம்
சேஷ தீர்த்தம்
தல விருட்சம்
வில்வம்
விமானம்
சந்திர விமானம்
சுத்த சத்வ விமானம்
மங்களாசாசனம்
திருமங்கையாழ்வார் 10 பாசுரங்கள்.
42. திருக்கோவலூர்
விழுப்புரம் - தமிழகம்.
பண்ருட்டியிலிருந்து திருவண்ணாமலை செல்லும் சாலையில்
உள்ளது.
1000 – 2000 வருடங்கள் பழமையான திருத்தலம்.
மூலவர்
ஸ்ரீ திரிவிக்ரமன் - திருவடியை உயரத் தூக்கி நின்ற திருக்கோலம்.
உத்சவர்
ஸ்ரீ ஆயனார்
ஸ்ரீ கோவலன்
தாயார்
ஸ்ரீ பூங்கோவல் நாச்சியார்
தீர்த்தம்
பெண்ணையாறு
கிருஷ்ணா தீர்த்தம்
ஸ்ரீ சக்ர தீர்த்தம்
தல விருட்சம்
புன்னை மரம்
விமானம்
ஸ்ரீ கர விமானம்
மங்களாசாசனம்
திருமங்கையாழ்வார்
பொய்கையாழ்வார்
பூதத்தாழ்வார்
– மொத்தம் 21 பாசுரங்கள் பாடப்பெற்றது
தொண்டை நாட்டு
திவ்யதேசங்கள் - 22
43. திருக்கச்சி - அத்தகிரி
காஞ்சிபுரம், தமிழகம்.
1000 - 2000 வருடங்கள் பழமையான திருத்தலம்.
மூலவர்
ஸ்ரீ வரதராஜப் பெருமாள்
ஸ்ரீ பேரருளாளப் பெருமாள்
ஸ்ரீ தேவாதிராஜன்
ஸ்ரீ தேவிப்பெருமாள் - நின்ற திருக்கோலம்.
தாயார்
ஸ்ரீ பெருந்தேவித் தாயார்
ஸ்ரீ மகாதேவி
தீர்த்தம்
வேகவதி ஆறு
அனந்தசரஸ் தீர்த்தம்
சேஷ தீர்த்தம்
வராஹத் தீர்த்தம்
பிரம்மத் தீர்த்தம்
பத்மத் தீர்த்தம்
அக்னிருசலத் தீர்த்தம்
தல விருட்சம்
போதி மரம்
அரசமரம்
விமானம்
புண்யகோடி விமானம்
மங்களாசாசனம்
திருமங்கையாழ்வார்
பேய்யாழ்வார்
பூதத்தாழ்வார்
– மொத்தம் 7 பாசுரங்கள்
பாடப்பெற்றது
44. அஷ்டபுயக்கரம்
காஞ்சிபுரம் – தமிழகம்.
காஞ்சிபுரம் ஸ்ரீ வரதரஜர் சன்னதியிலிருந்து 1.5 கிமீ
தூரத்தில் உள்ளது.
1000 - 2000 வருடங்கள் பழமையான திருத்தலம்.
மூலவர்
ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாள்
ஸ்ரீ கஜேந்திர வரதர்
ஸ்ரீ சக்ரதரர் - 8 கரங்களுடன் நின்ற திருக்கோலம்.
தாயார்
ஸ்ரீ அலர்மேல்மங்கை
ஸ்ரீ பத்மாசனி தாயார்
தீர்த்தம்
கஜேந்திர தீர்த்தம்
விமானம்
ககநாக்ருதி விமானம்
சக்ராக்ருதி விமானம்
மங்களாசாசனம்
திருமங்கையாழ்வார்
பேய்யாழ்வார்
– மொத்தம் 12 பாசுரங்கள்
பாடப்பெற்றது
45. திருத்தண்கா
தூப்புல்
காஞ்சிபுரம் – தமிழகம்.
அஷ்டபுயக்கரம், ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாள் சன்னதிக்கு அருகில் உள்ளது.
1000 – 2000 வருடங்கள் பழமையான திருத்தலம்.
மூலவர்
ஸ்ரீ விளக்கொளிப் பெருமாள்
ஸ்ரீ தீபப்பிரகாசர்
ஸ்ரீ திவ்யபிரகாசர் – நின்ற திருக்கோலம்.
தாயார்
ஸ்ரீ மரகதவல்லி தாயார்
தீர்த்தம்
சரஸ்வதி தீர்த்தம்
விமானம்
ஸ்ரீ கர விமானம்
மங்களாசாசனம்
திருமங்கையாழ்வார் – 2 பாசுரங்கள்.
46. திருவேளுக்கை
அழகிய சிங்க பெருமாள் கோயில்
காஞ்சிபுரம் – தமிழகம்.
அஷ்டபுயக்கரம், ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாள் சன்னதிக்கு தென்மேற்கில் அரை கிமீ தூரத்தில் உள்ளது.
500 – 1000 வருடங்கள் பழமையான திருத்தலம்.
மூலவர்
ஸ்ரீ அழகிய சிங்கர்
ஸ்ரீ நரசிம்மர்
ஸ்ரீ முகுந்தநாயகன் – நின்ற திருக்கோலம்.
தாயார்
ஸ்ரீ அமிர்தவல்லி
ஸ்ரீ வேளுக்கைவல்லி
தீர்த்தம்
கனகசரஸ்
ஹேமசரஸ்
விமானம்
கனக விமானம்
மங்களாசாசனம்
திருமங்கையாழ்வார்
பேய்யாழ்வார்
– மொத்தம் 4 பாசுரங்கள் பாடப்பெற்றது
47. திருநீரகம்
பெரிய காஞ்சிபுரம்,
உலகளந்த பெருமாள் கோயில்,
காஞ்சிபுரம் - தமிழகம்.
1000 - 2000 வருடங்கள்
பழமையான திருத்தலம்.
மூலவர்
ஸ்ரீ ஜகதீசப்பெருமாள்
தாயார்
ஸ்ரீ நிலமங்கைவல்லி
தீர்த்தம்
அக்ரூர தீர்த்தம்
விமானம்
ஜகதீச்வர விமானம்
மங்களாசாசனம்
திருமங்கையாழ்வார் 1 பாசுரம்.
48. திருப்பாடகம்
பெரிய காஞ்சிபுரம்,
காஞ்சிபுரம், தமிழகம்.
ஏகாம்பரநாதர் கோயிலுக்கு தென்மேற்கே உள்ளது.
1000 - 2000 வருடங்கள்
பழமையான திருத்தலம்.
மூலவர்
ஸ்ரீ பாண்டவதூதப் பெருமாள் - வீற்றிருந்தத் திருக்கோலம்.
தாயார்
ஸ்ரீ ருக்மணி
ஸ்ரீ சத்யபாமா
தீர்த்தம்
மட்சயத் தீர்த்தம்
விமானம்
பத்ர,வேத கோடி விமானம்
மங்களாசாசனம்
திருமங்கையாழ்வார்
திருமழிசையாழ்வார்
பேய்யாழ்வார்
பூதத்தாழ்வார்
– மொத்தம் 6 பாசுரங்கள் பாடப்பெற்றது
49. நிலாத்திங்கள்
பெரிய காஞ்சிபுரம்,
காஞ்சிபுரம், தமிழகம்.
பெரிய காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோயிலில்
உள்பிரகாரத்தில் உள்ளது.
1000 - 2000 வருடங்கள்
பழமையான திருத்தலம்.
மூலவர்
ஸ்ரீ நிலாத்திங்கள் துண்டத்தான்
ஸ்ரீ சந்திர சூடப்பெருமாள் – நின்ற திருக்கோலம்.
தாயார்
ஸ்ரீ நேர் ஓருவரில்லா வல்லி
தீர்த்தம்
சந்திர புஷ்கரணி - இப்போது இல்லை.
விமானம்
சூரிய விமானம்
மங்களாசாசனம்
திருமங்கையாழ்வார் 1 பாசுரம்.
50. திருஊரகம்
பெரிய காஞ்சிபுரம்
காஞ்சிபுரம் – தமிழகம்.
பெரிய காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அருகே உள்ளது.
ஸ்ரீ காமாட்சி அம்மன் கோயிலுக்கு எதிரில் உள்ளது.
இங்கு ஊரகம், காரகம், கார்வானம் ஆகிய 3 திவ்யதேங்களின் பெருமாள்கள் எழுந்தருளியுள்ளனர். எனவே இத்தலத்தைத் தரிசித்தால் 4 திவ்யதேசங்களை தரிசத்தது போலாகும்.1000 - 2000 வருடங்கள் பழமையான திருத்தலம்.
மூலவர்
ஸ்ரீ உலகளந்த பெருமாள்
ஸ்ரீ திருவிக்ரம பெருமாள் - நின்ற திருக்கோலம்.
உத்சவர்
ஸ்ரீ பேரகத்தான்
தாயார்
ஸ்ரீ அம்ருதவல்லி
ஸ்ரீ அமுதவல்லி நாச்சியார்
தீர்த்தம்
நாக தீர்த்தம்
விமானம்
சாரஸ்ரீகர விமானம்
மங்களாசாசனம்
திருமங்கையாழ்வார் 6 பாசுரங்கள்.
51. திருவெக்கா
காஞ்சிபுரம் – தமிழகம்.
காஞ்சிபரத்தில் உள்ளது. ஸ்ரீ அஷ்டபுயகரப் பெருமாள்
சன்னதிக்கு எதிரில் உள்ளது.
பொய்கை ஆழ்வார் அவதரித்தத் தலம்.
500 - 1000 வருடங்கள்
பழமையான திருத்தலம்.
மூலவர்
ஸ்ரீ யதோத்தகாரி
ஸ்ரீ சொன்னவண்ணம் செய்த பெருமாள் – புஜங்கசயனம்.
தாயார்
கோமளவல்லி நாச்சியார்.
தீர்த்தம்
பொய்கை புஷ்கரணி
விமானம்
வேதசார விமானம்
மங்களாசாசனம்
திருமங்கையாழ்வார்
திருமழிசையாழ்வார்
பொய்கையாழ்வார்
பேய்யாழ்வார்
நம்மாழ்வார்
– மொத்தம் 15 பாசுரங்கள் பாடப்பெற்றது
52. திருக்காரகம்
காஞ்புரம் - தமிழகம்.
பெரிய காஞ்சிபுரம் – உலகளந்த பெருமாள் கோயிலில் மூன்றாம் பிரகாரத்தில் வடக்குத் திசை பார்த்து
நின்ற திருக்கோலத்தில் காட்சியளிக்கிறார்.
1000 - 2000 வருடங்கள் பழமையான திருத்தலம்.
மூலவர்
ஸ்ரீ கருணாகரப் பெருமாள்.
உத்சவர்
ஸ்ரீ ஜகதீசப் பெருமாள்.
தாயார்
ஸ்ரீ பத்மாமணி நாச்சாயார்
ஸ்ரீ ரமாமணி நாச்சியார்
தீர்த்தம்
அக்ராய தீர்த்தம்
விமானம்
வாமன ரம்ய விமானம்
மங்களாசாசனம்
திருமங்கையாழ்வார் 1 பாசுரம்.
53. திருக்கார்வானம்
காஞ்சிபுரம், தமிழகம்
பெரிய காஞ்சிபுரம் – உலகளந்த பெருமாள் கோயிலில் பிரகாரத்தில் ஓரு சன்னதியாக உள்ளது.
1000 - 2000 வருடங்கள்
பழமையான திருத்தலம்.
மூலவர்
ஸ்ரீ கள்வர்பெருமாள்
ஸ்ரீ கார்வண்ணப் பெருமாள்.
தாயார்
ஸ்ரீ கமலவல்லி நாச்சியார்
ஸ்ரீ தாமரையாள்
தீர்த்தம்
கௌரி தீர்த்தம்
தராதர தீர்த்தம்
விமானம்
புஷ்கல விமானம்
மங்களாசாசனம்
திருமங்கையாழ்வார் 1 பாசுரம்.
54. திருக்கள்வனூர்
காஞ்சிபுரம் – தமிழகம்.
பெரிய காஞ்சிபுரத்தில் ஸ்ரீ காமாட்சி அம்மன்
கோயிலுக்குள் அம்மன் கரப்ப கிரகத்திற்கு வலதுபுறம் உள்ளது.
1000 - 2000 வருடங்கள்
பழமையான திருத்தலம்.
மூலவர்
ஸ்ரீ ஆதிவராஹப் பெருமாள்
ஸ்ரீ கள்வப்பெருமாள் – நின்ற திருக்கோலம்.
தாயார்
ஸ்ரீ அஞ்சிலை வல்லி
ஸ்ரீ சௌந்திர்யலக்ஷ்மி.
தீர்த்தம்
நித்ய புஷ்கரணி
விமானம்
வாமன விமானம்
மங்களாசாசனம்
திருமங்கையாழ்வார் 1 பாசுரம்.
55. திருப்பவள வண்ணம்
காஞ்சிபுரம் - தமிழகம்.
பெரிய காஞ்சிபுரத்தில் காலாண்டார் தெருவில் உள்ளது.
புகைவண்டி நிலையத்திற்கு அருகில் உள்ளது.
1000 – 2000 வருடங்கள் பழமையான திருத்தலம்.
மூலவர்
ஸ்ரீ பவளவண்ணப் பெருமாள் – நின்ற திருக்கோலம்.
தாயார்
ஸ்ரீ பவளவல்லி நாச்சியார்
தீர்த்தம்
சக்ர தீர்த்தம்
மங்களாசாசனம்
திருமங்கையாழ்வார் 1 பாசுரம்.
56. திருப்பரமேச்சுர விண்ணகரம்
காஞ்சிபுரம் - தமிழகம்.
பெரிய காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அருகில் உள்ளது.
இக்கோயில் மூன்று அடுக்குகளாக கட்டப்பட்டது.
அடுக்கில் பெருமாள் வீற்றிருந்த நிலையிலும், மத்தியில் ஸ்ரீதேவியுடன் ஸ்ரீரங்கநாதர் சயனக்
கோலத்திலும், மேல் அடுக்கில்
நின்ற திருக்கோலத்திலும் உள்ளார்.
1000 - 2000 வருடங்கள்
பழமையான திருத்தலம்.
மூலவர்
ஸ்ரீ பரமபத நாதன்
ஸ்ரீ வைகுந்த நாதன் - வீற்றிருந்த
திருக்கோலம்.
தாயார்
ஸ்ரீ வைகுந்தவல்லி
தீர்த்தம்
ஐரம்மத தீர்த்தம்
மங்களாசாசனம்
திருமங்கையாழ்வார் 10 பாசுரங்கள்.
57. திருப்புட்குழி
காஞ்சிபுரம் - தமிழகம்.
சென்னையிலிருந்து வேலூர் செல்லும் சாலையில்
பாலுசெட்டி சத்திரம் என்ற ஊருக்கு அருகில் உள்ளது. காஞ்சிபுரத்திலிருந்து 11 கிமீ.
500 - 1000 வருடங்கள்
பழமையான திருத்தலம்.
மூலவர்
ஸ்ரீ விஜயராகவப் பெருமாள் - வீற்றிருந்த திருக்கோலம்.
தாயார்
ஸ்ரீ மரகதவல்லி தாயார்
தீர்த்தம்
ஜடாயு தீர்த்தம்.
தல விருட்சம்
பாதிரி மரம்
விமானம்
வீரகோடி விமானம்
மங்களாசாசனம்
திருமங்கையாழ்வார் 2 பாசுரங்கள்.
58. திருநின்றவூர்
திருவள்ளுர் - தமிழகம்.
பூந்தமல்லி – திருவள்ளுர் சாலையில் உள்ளது. சென்னையிலிருந்து 29 கிமீ தூரத்தில் தின்னனூர்
ரயில் நிலையத்திலிருந்து ஓன்றரை கிமீ தூரத்தில் உள்ளது.
1000 – 2000 வருடங்கள் பழமையான திருத்தலம்.
மூலவர்
ஸ்ரீ பத்தவத்சலப் பெருமாள்
ஸ்ரீ பத்தராவிப் பெருமாள் - நின்ற திருக்கோலம்.
தாயார்
ஸ்ரீ சுதாவல்லி
ஸ்ரீ என்னைப்பெற்ற தாயார்
தீர்த்தம்
வருண தீர்த்தம்
விருத்தக்ஷீர நதி
தல விருட்சம்
பாரிஜாதம் மரம்
விமானம்
உத்பவ விமானம்
மங்களாசாசனம்
திருமங்கையாழ்வார் 2 பாசுரங்கள்.
திருவள்ளூர்
வீரராகவப்பெருமாள் கோயில்
திருவள்ளூர் – தமிழகம்.
சென்னை - திருப்பதி
சாலையில் உள்ளது.
1000 - 2000 வருடங்கள்
பழமையான திருத்தலம்.
மூலவர்
ஸ்ரீ வீரராகவப் பெருமாள்
தாயார்
ஸ்ரீ கனகவல்லி தாயார்
தீர்த்தம்
ஹிருத்தபாப நாசினி தீர்த்தம்
விமானம்
விஜய கோடி விமானம்
மங்களாசாசனம்
திருமங்கையாழ்வார் 12 பாசுரங்கள்.
60. திருவல்லிக்கேணி
ப்ருந்தாரண்ய க்ஷேத்திரம்
சென்னை - தமிழகம்.
இத்தலம் இரண்டாம் திருப்பதி என அழைக்கப்படுகிறது.
1000 - 2000 வருடங்கள்
பழமையான திருத்தலம்.
மூலவர்
ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் – நின்ற திருக்கோலம்.
உத்சவர்
ஸ்ரீ வேங்கடகிருஷ்ணன்
ஸ்ரீதேவி
ஸ்ரீபூதேவி
தாயார்
ஸ்ரீ ருக்மணி தாயார்
தீர்த்தம்
கைரவினி புஷ்கரணி
அல்லிக்கேணி
தல விருட்சம்
மகிழவரம்
விமானம்
ஆனந்த விமானம்
பிரணவ விமானம்
புஷ்ப, சேஷ
தைவீக விமானம்.
மங்களாசாசனம்
திருமங்கையாழ்வார்
பேயாழ்வார்
திருமழிசையாழ்வார்
– மொத்தம் 12 பாசுரங்கள் பாடப்பெற்றது
61. திருநீர்மலை
நீர்மலை
தோயத்தகிரி
காஞ்சிபுரம் - தமிழகம்.
சென்னை பல்லாவரத்திலிருந்து 5 கிமீ தூரத்தில் உள்ளது.
இங்குப் பெருமாள் நின்ற, இருந்த, கிடந்த, நடந்த என்ற
நான்கு திருக்கோலங்களில் காட்சியளிக்கிறார்.
இத்தலம் தானாகவே தோன்றியத்
தலம். ஸ்வயம் வயக்த தலம் எனப்படும். இதுபோல தோன்றிய தலங்கள் – திருவரங்கம், திருப்பதி, ஸ்ரீமுஷ்ணம், சாளக்கிராமம், நைமிசாரண்யம், புஷ்கரம், நாராயணபுரம், திருநீர்மலை – எட்டு தாலங்கள்.
1000 – 2000 வருடங்கள் பழமையான திருத்தலம்.
மலை அடிவாரக் கோயில்
மூலவர்
ஸ்ரீ நீர்வண்ணபெருமாள்
ஸ்ரீ நீலமுகில் வண்ணப் பெருமாள்
நின்ற திருக்கோலம்.
தாயார்
ஸ்ரீ அணிமாமலர் மங்கை
மலை மேல் கோயில்
மூலவர்
ஸ்ரீ பால நரசிம்மர்
ஸ்ரீ சாந்த நரசிம்மர்
வீற்றிருந்த திருக்கோலம்
இருந்த திருக்கோலம்.
மூலவர்
ஸ்ரீ ரங்கநாதர்
மாணிக்க சயனம் - கிடந்த
திருக்கோலம்
மூலவர்
ஸ்ரீ உலகளந்தப் பெருமாள்
ஸ்ரீ திரிவிக்ரமப் பெருமாள்
நின்ற, நடந்த திருக்கோலம்.
தாயார்
ஸ்ரீ ரங்கநாயகி தாயார்
தீர்த்தம்
மணிகர்னிகா புஷ்கரணி
சித்த, ஸ்வரண, காருண்ய
தீர்த்தம்
க்ஷீரா புஷ்கரணி
தல விருட்சம்
வேப்பமரம்
விமானம்
தோயகிரி விமானம்
மங்களாசாசனம்
திருமங்கையாழ்வார்
பூதத்தாழ்வார்
– மொத்தம் 20 பாசுரங்கள் பாடப்பெற்றது
62. திருவிடவெந்தை
திருவிடந்தை
காஞ்சிபுரம்– தமிழகம்.
மகாபலிப்புரத்திலிருந்து 20 கிமீ தூரத்தில் உள்ளது.
கோவளத்திற்கு அடுத்த ஊர்.
1000 - 2000 வருடங்கள்
பழமையான திருத்தலம்.
மூலவர்
ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாள்
ஸ்ரீ லக்ஷ்மி வராகப் பெருமாள் – நின்ற திருக்கோலம்.
உத்சவர்
ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாள்.
தாயார்
ஸ்ரீ கோமளவல்லி நாச்சியார்
தீர்த்தம்
கல்யாண தீர்த்தம்
வராக தீர்த்தம்
தல விருட்சம்
புன்னை மரம்
விமானம்
கல்யாண விமானம்
மங்களாசாசனம்
திருமங்கையாழ்வார் - 13 பாசுரங்கள்.
63. திருக்கடல்மல்லை
மாமல்லபுரம்
மகாபலிபுரம்
காஞ்சிபுரம் - தமிழகம்.
பூதத்தாழ்வார் அவதரித்த தலம்.
1000 – 2000 வருடங்கள் பழமையான திருத்தலம்.
மூலவர்
ஸ்ரீ ஸ்தல சயனப்பெருமாள் – புஜங்க சயனம்
உத்சவர்
ஸ்ரீ உலகுய்யநின்றப் பெருமாள்
தாயார்
ஸ்ரீ நிலமங்கை நாச்சியார்
தீர்த்தம்
புண்டரீக புஷ்கரணி
கருட நதி
தல விருட்சம்
புன்னை மரம்
விமானம்
அனந்த விமானம்
மங்களாசாசனம்
திருமங்கையாழ்வார்
பூதத்தாழ்வார்
– மொத்தம் 27 பாசுரங்கள் பாடப்பெற்றது
64. திருக்கடிகை
சோளசிம்மபுரம்
சோளிங்கர்
கடிசாசலம்
வேலூர் - தமிழகம்.
அரக்கோணத்திலிருந்து 20 கிமீ தூரத்தில் உள்ளது.
பெரிய மலையில் ஸ்ரீ யோக நரசிம்மர் எழுந்தருளியுள்ளார். 1500 படிகள் ஏறி இவரை தரிசித்தப் பிறகுதான், சின்ன மலையில் உள்ள ஸ்ரீ ஆஞ்சிநேயரை தரிசிக்க வேண்டும்.
1000 – 2000 வருடங்கள் பழமையான திருத்தலம்.
கீழே உள்ள கோயிலில் மூலவர் இல்லை.
உத்சவர்
ஸ்ரீ பக்தவத்சலப் பெருமாள்
ஸ்ரீ தக்கான்
பெரிய மலை – 500 அடி உயரம்
மூலவர்
ஸ்ரீ யோக நரசிம்மர் – வீற்றிருந்த திருக்கோலம்.
தாயார்
ஸ்ரீ அம்ருதவல்லி தாயார்
தீர்த்தம்
அம்ருத தீர்த்தம்
தக்கான் குளம்
விமானம்
சிம்ஹகோஷ்டாக்ருதி விமானம்
சிறிய மலை
மூலவர்
ஸ்ரீ யோக ஆஞ்சநேயர்.
மங்களாசாசனம்
திருமங்கையாழ்வார்
பேயாழ்வார்
– மொத்தம் 4 பாசுரங்கள் பாடப்பெற்றது
மலை நாட்டு
திவ்யதேசங்கள் - 13
65. திருநாவாய்
மலபுரம், கேரளா.
சென்னை - கள்ளிக்கோட்டை
ரயில் பாதையில் திருநாவாய் என்ற இடத்திலிருந்து 1.5 கிமீ தூரத்தில் உள்ளது.
குட்டிபுரத்திலிருந்து 7 கிமீ தூரத்தில் உள்ளது.
மூலவர்
ஸ்ரீ நாவாய் முகுந்தன் –
ஸ்ரீ நாராயணன் – நின்ற திருக்கோலம்.
தாயார்
ஸ்ரீ மலர்மங்கை நாச்சியார்
ஸ்ரீ சிறுதேவி
தீர்த்தம்
செங்கமல சரஸ்
விமானம்
வேத விமானம்
மங்களாசாசனம்
திருமங்கையாழ்வார்
நம்மாழ்வார் - 13 பாசுரங்கள்.
– மொத்தம் 13 பாசுரங்கள் பாடப்பெற்றது
66. திருவித்துவக்கோடு
திருமிற்றக்கோடு
ஐந்து மூர்த்தி திருக்கோயில்
பாலக்காடு – கேரளா.
பாலக்காடு – பட்டாம்பி என்ற ஊருக்கு அருகில் உள்ளது.
2000 – 3000 வருடங்கள் பழமையான திருத்தலம்.
மூலவர்
ஸ்ரீ உய்யவந்த பெருமாள்
ஸ்ரீ அபயப்ரதன் - நின்ற
திருக்கோலம்.
தாயார்
ஸ்ரீ வித்துவக்கோட்டு வல்லி
ஸ்ரீ பத்மாசனி நாச்சியார்.
தீர்த்தம்
சக்ர தீர்த்தம்
விமானம்
புஷ்கல விமானம்
மங்களாசாசனம்
குலசேகராழ்வார் - 10 பாசுரங்கள்.
67. திருக்காட்கரை
காக்கரா
கொச்சி - எர்ணாக்குளம் - கேரளா.
ஆலவாய் - திருச்சூர் ரயில்
பாதையில் இருஞாலக்கொடி என்ற ஊரிலிருந்து 14 கிமீ தூரத்தில் உள்ளது.
மூலவர்
ஸ்ரீ காட்கரையப்பன்
ஸ்ரீ வாமனப் பெருமாள் – நின்ற திருக்கோலம்.
தாயார்
ஸ்ரீ வாத்ஸல்யவல்லி
ஸ்ரீ பெருஞ்செல்வநாயகி
தீர்த்தம்
கபில தீர்த்தம்
விமானம்
புஷ்கல விமானம்
மங்களாசாசனம்
நம்மாழ்வார் - 11 பாசுரங்கள்.
68. திருமூழிக்களம்
எர்ணாகுளம் – கேரளா.
ஆலவாயிலிருந்து பேருந்தில் செல்லலாம்.
1000 – 2000 வருடங்கள் பழமையான திருத்தலம்.
மூலவர்
ஸ்ரீ திருமூழிக்களத்தான்
ஸ்ரீ அப்பன்
ஸ்ரீ ஸூக்திநாதப் பெருமாள் - நின்ற திருக்கோலம்.
தாயார்
ஸ்ரீ மதுரவேணி நாச்சியார்
தீர்த்தம்
பெருங்குளம், சங்கத் தீர்த்தம், சிற்றாறு.
விமானம்
சௌந்தர்ய விமானம்.
மங்களாசாசனம்
திருமங்கையாழ்வார்
நம்மாழ்வார்
– மொத்தம் 14 பாசுரங்கள் பாடப்பெற்றது
69.திருவல்லவாழ்
திருவல்லப க்ஷேத்திரம்
பத்தனம்திட்டா, கேரளா.
கோட்டயத்திற்கு அருகில் உள்ளது.
ஸ்ரீ சுதர்தன சக்கரம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
1000 – 2000 வருடங்கள் பழமையான திருத்தலம்.
மூலவர்
ஸ்ரீ கோலப்பிரான்
ஸ்ரீ திருவாழ்மார்பன்
ஸ்ரீ வல்லபன் – நின்ற திருக்கோலம்.
தாயார்
ஸ்ரீ செல்வத்திருக்கொழுந்து நாச்சியார்
ஸ்ரீ வாத்சல்யதேவி
தீர்த்தம்
கண்டாகர்ண தீர்த்தம்
பம்பை ஆறு.
விமானம்
சதுரங்க கோல விமானம்
மங்களாசாசனம்
திருமங்கையாழ்வார்
நம்மாழ்வார்
- மொத்தம் 22 பாசுரங்கள் பாடப்பெற்றது
70. திருக்கடித்தானம்
கோட்டயம் - கேரளா.
கோட்டயத்திலிருந்து பேருந்து வசதி உள்ளது.
2000 – 3000 வருடங்கள் பழமையான திருத்தலம்.
மூலவர்
ஸ்ரீ அற்புத நாராயணன்
ஸ்ரீ அமிர்த நாராயணர் – நின்ற திருக்கோலம்.
தாயார்
ஸ்ரீ கற்பகவல்லி நாச்சியார்
ஸ்ரீ செங்கமலவல்லி தாயார்
தீர்த்தம்
பூமி தீர்த்தம்
சங்க தீர்த்தம்
திருச்சிற்றாறு
விமானம்
புண்யகோடி விமானம்
மங்களாசாசனம்
நம்மாழ்வார் - 11 பாசுரங்கள்.
71. திருச்செங்குன்றூர்
திருச்சிற்றாறு
ஆலப்புழா - கேரளா.
செங்கண்ணூர் அருகில் உள்ளது.
1000 – 2000 வருடங்கள் பழமையான திருத்தலம்.
மூலவர்
ஸ்ரீ இமையவரப்பன் – நின்ற திருக்கோலம்
தாயார்
ஸ்ரீ செங்கமலவல்லி
தீர்த்தம்
சங்க தீர்த்தம்
திருச்சிற்றாறு
விமானம்
ஜகஜ்ஜோதி விமானம்
மங்களாசாசனம்
நம்மாழ்வார் - 11 பாசுரங்கள்.
72. திருப்புலியூர்
புலியூர்
ஆலப்புழா - கேரளா.
செங்கண்ணூரிலிருந்து 5 கிமீ தூரத்தில் உள்ளது.
1000 – 2000 வருடங்கள் பழமையான திருத்தலம்.
மூலவர்
ஸ்ரீ மாயப்பிரான் – நின்ற திருக்கோலம்
தாயார்
ஸ்ரீ பொற்கொடி நாச்சியார்
தீர்த்தம்
பூஞ்சுனைத் தீர்த்தம்
விமானம்
புருஷோத்தம விமானம்
மங்களாசாசனம்
திருமங்கையாழ்வார்
நம்மாழ்வார்
– மொத்தம் 12 பாசுரங்கள் பாடப்பெற்றது
73. திருவாறன்விளை
ஆரம்முளா
பத்தனம்திட்டா - கேரளா.
செங்கண்ணூரிலிருந்து 10 கிமீ தூரத்தில் உள்ளது.
1000 – 2000 வருடங்கள் பழமையான திருத்தலம்.
மூலவர்
ஸ்ரீ திருக்குறளப்பன்
ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் – நின்ற திருக்கோலம்.
தாயார்
ஸ்ரீ பத்மாசனி
நாச்சியார்
தீர்த்தம்
பம்பா தீர்த்தம்
தல விருட்சம்
வன்னி மரம்
விமானம்
வாமன விமானம்
மங்களாசாசனம்
நம்மாழ்வார் - 11 பாசுரங்கள்.
74. திருவண்வண்டூர்
வண்வண்டூர்
ஆலப்புழா – கேரளா.
செங்கண்ணூரிலிருந்து 6 கிமீ தூரத்தில்
உள்ளது.
1000 – 2000 வருடங்கள் பழமையான திருத்தலம்.
மூலவர்
ஸ்ரீ பாம்பணையப்பன்
ஸ்ரீ கமலநாதன் - நின்ற திருக்கோலம்.
தாயார்
ஸ்ரீ கமலவல்லி நாச்சியார்
தீர்த்தம்
பம்பை தீர்த்தம்
விமானம்
வேதாலய விமானம்
மங்களாசாசனம்
நம்மாழ்வார் - 11 பாசுரங்கள்.
75. திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோயில்
திருவனந்தபுரம் – கேரளா.
1000 – 2000 வருடங்கள் பழமையான திருத்தலம்.
மூலவர்
ஸ்ரீ அனந்தபத்மநாபன் – புஜங்க சயனம்
தாயார்
ஸ்ரீ ஹரி லக்ஷ்மி
தீர்த்தம்
பத்ம தீர்த்தம்
வராக தீர்த்தம்
மத்சய தீர்த்தம்
விமானம்
ஹேமகூட விமானம்
மங்களாசாசனம்
நம்மாழ்வார் - 11 பாசுரங்கள்.
76. திருவட்டாறு
கன்னியாகுமரி – தமிழகம்.
திருவனந்தபுரம் – நாகர்கோயில் செல்லும் சாலையில் தொடுவெட்டி என்ற இடத்திலிருந்து 10 கிமீ
தூரத்தில் உள்ளது.
2000 – 3000 வருடங்கள் பழமையான திருத்தலம்.
மூலவர்
ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாள் – புஜங்க சயனம்
தாயார்
ஸ்ரீ மரகதவல்லி நாச்சியார்
தீர்த்தம்
கடல்வாய்த் தீர்த்தம்
ராம தீர்த்தம்
வட்டாறு
விமானம்
அஷ்டாங்க விமானம்
மங்களாசாசனம்
நம்மாழ்வார் - 11 பாசுரங்கள்.
77. திருவண்பரிசாரம்
திருப்பதிசாரம்
கன்னியாகுமரி – தமிழகம்.
நாகர்கோயிலிருந்து 3 கிமீ தூரத்தில் உள்ளது.
1000 – 2000 வருடங்கள் பழமையான திருத்தலம்.
மூலவர்
ஸ்ரீ திருக்குறளப்பன்
ஸ்ரீ திருவாழ்மார்பன் – வீற்றிருந்த திருக்கோலம்
தாயார்
ஸ்ரீ கமலவல்லி நாச்சியார்
தீர்த்தம்
லக்ஷ்மி தீர்த்தம்
விமானம்
இந்திர கல்யாண விமானம்
மங்களாசாசனம்
நம்மாழ்வார் - 1 பாசுரம்.
ஓம் நமோ நாராயணாய !
தரிசனம் தொடரும்.....
மீண்டும் சந்திப்போம்..... நன்றி !
முந்தைய
பதிவுக்கு >> 108 திவ்ய தேசங்கள் – 1
அடுத்த
பதிவுக்கு >> 108 திவ்ய தேசங்கள் - 3