உணவு மற்றும்
ஆரோக்கியம்
பாகம் 1
பலர் சுவைக்காக உணவு உட்கொள்கிறார்கள். இந்த பழக்கம் ஓரு
ஆரோக்கியமற்ற முறையற்ற வாழ்விற்கு எடுத்து செல்லும் என்பது உண்மை.இதை ஓரு பழமொழி
அழகாக உணர்த்துகிறது – “கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம்”. கண் பார்வையற்ற நிலையில் ஓரு
மனிதன் சூரியனை எவ்வாறு காண முடியும் இதுவே பொருளாகும். உடலில் பல வியாதிகள் வந்த
பிறகு நல்ல உணவை தேடுவது வீண்தானே. முறையான
உணவு உட்கொள்ளும் அறிவு இருந்தால் நல்ல மகிழ்ச்சியான ஆரோக்கியமான வாழ்வு
கிடைக்கும்.
உணவே மருந்து
உணவு நம் உடலை வளர்க்க மட்டும் இல்லை உயிரை
வளர்க்கவும்தான். உணவுதான் நம்மை தொற்றுக்கள் மற்றும் நோய்களிலிருந்தும் காக்கிறது.
நாம் உணவை சரியான அளவில் உட்கொள்ளும் போது பல நோய்களிலிருந்து நாம்
பாதுகாக்கப்படுகிறோம். இந்த நல்ல உணவு பழக்கம் இருந்தால் நாம் எந்த மருந்தும்
உட்கொள்ளாமல் நிம்மதியான வாழ்க்கை வாழலாம். இதனால்தான் நம் முன்னோர்கள் உணவே
மருந்து என்பதை அறிவுறுத்தினார்கள்.
நமது
திருவள்ளுவர் தமது திருக்குறள் மூலமாக வாழ்க்கைக்கு தேவையான அனைத்தையும் நமக்கு
சொல்லி இருக்கிறார். அதில் உணவு உட்கொள்ளும் முறையையும் அறிவுறுத்திகிறார்.
குறள் - 942 அதிகாரம் –
மருந்து
அற்றது போற்றி உணின்.
பொருள்
ஓரு மனிதன் தான் உண்ட
உணவு செரித்தப் பிறகு மீண்டும் உணவை உட்கொண்டால், அந்த மனிதனுக்கு மருந்து
தேவையில்லை.அதாவது எந்த வியாதியும் அணுகாது என்பது பொருள்.
நோயற்ற வாழ்வே
குறைவற்ற செல்வம்
அனைவரும் “நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்” என்பதை அறிந்திருப்போம். இந்த
கருத்து மிக அழமான பொருள் கொண்டது. நாம் எவ்வளவு பொருட்கள், சொத்துக்கள்
சேர்த்தாலும் அதை ஆண்டு அனுபவிக்க நல்ல திடமான உடலும் ஆரோக்கியமான மனமும்
வேண்டும். இல்லையென்றால் செல்வம் அனைத்தும் மருத்துவதிற்கே செலவாகும். நமக்கு
மகிழ்ச்சி வேண்டுமானால் நல்ல ஆரோக்கியம் வேண்டும்.
உணவின் பயன்பாடுகள்
நல்ல ஆரோக்கியமான வாழ்க்கைக்கு நமக்கு உணவின் முக்கியத்துவத்தைப்
பற்றி புரிதல் கட்டாயம் வேண்டும். நம் அழகைப் பேணிக்கக் காக்க உதவுவது உணவே ஆகும்.
ஆரோக்கியமே அழகு தரும்.
ஓரு மனிதன் பிறக்கும் போது தாய்ப்பால் உணவாக இருக்கிறது. பிறகு அவன்/அவள் படிபடியாக பலவிதமான உணவை உட்கொள்ளத் தொடங்கி வளர்ச்சி அடைகிறான்/அடைகிறாள். நாம் உணவை உட்கொள்ளவது நமது பசியை போக்க உதவும். நல்ல ருசியான உணவு நம் நாக்கிற்கும் மனதிற்கும் மகிழ்ச்சியாக அமையும். இது மனித வளர்ச்சிக்கு அடிப்படை கட்டமைப்பாகும்.
நமக்கு உயிர் வாழ சக்தி தேவை. அந்த உயிர் சக்தியைக் கொடுப்பது
உணவேயாகும். இந்த மனித உடல் ஓரு இயந்திரம்.
நமது உடலில் வெளி பாகங்களாக கண்கள், காதுகள், கைகள், கால்கள், மற்றும் பல
பாகங்கள் உள்ளன, இவற்றின் செயல்பாடுகளைப் பற்றி நமக்கு நன்கு தெரியும் அல்லவா. இவை
இயங்க காரணமாக உள்ள சக்தியைக் கொடுப்பது உணவுதான்.
நாம்
உறங்கும்போது நம் உடலின் வெளிபாகங்கள் அவ்வளவு வேலை செய்வதில்லை. பெரும்பாலும்
ஓய்விலேயே இருக்கின்றன. ஆனால் நமது உடலில், நம் கண்ணுக்குத் தெரியாமல் உள்ளே
இருக்கும் பல பாகங்களுக்கும் இயங்க சக்தி தருவது உணவே. நாம் உயிருடன் இருப்பதற்கு
காரணமாக இருப்பதும் நம் உள் பாகங்கள் மட்டுமே. இவை நாம் உறக்கம் கொள்ளும்போதும்
கூட இயங்கிக் கொண்டே இருக்கின்றன.
நமது இதயம் இரத்த
ஓட்டத்தை ஏற்படுத்தி நாம் உயிர் வாழ அயறாது உழைக்கிறது, நமது மரணம் வரை. நுறையீறல்
நாம் சுவாசிக்க உதவுகிறது. இது தவறாமல் பிராண வாயுயை (oxygen) உள் இழுத்து. கரியமிலவாயுவை (carbon dioxide) வெளியேற்றி நாம் சுவாசித்து
உயிர்வாழ உதவுகிறது.
நம் ஜீரண உறுப்புக்கள், நாம்
உட்கொள்கின்ற அனைத்து உணவையும் செரிக்க வைத்து நமக்கு தேவையான சக்தியை
அவற்றிலிருந்து பிரித்தெடுத்து இரத்தத்தின் மூலமாக உடலுக்கு அளிக்கிறது. நமது
சிறுநீரகங்கள் கழிவுகளை வெளியேற்ற உதவி செய்கின்றன.
இவை
எல்லாவற்றிக்கும் தலைமைச் செயலகம் நமது மூளையாகும். மூளை அனைத்து செயல்பாடுகளையும்
கண்காணித்து நமது உடலை செயல்பட வைக்கிறது. இவை அனைத்திற்கும் ஆதாரம் நாம்
உட்க்கொள்ளும் உணவே ஆகும். மூளை நன்கு செயல்பட சக்திக் கொடுப்பதும் உணவுதான்.
உடலின் வளர்சிதை மாற்றம் என்ற செயல்பாடே
நம் வளர்ச்சிக்கு உதவுகிறது. நாம் உயிர் வாழ, நமது உடல் உறுப்புக்கள் நன்கு
செயல்பட உதவியாக இருக்கிறது. நமது உடலில் உள்ள உயிரணுக்களை சரிசெய்ய மற்றும்
புதுப்பிக்க, இந்த வளர்சிதை மாற்றம் என்ற செயல்பாடே காரணமாக அமைகிறது. இந்த
செயல்பாட்டிற்கு தேவையான சக்தி நமக்கு உணவின் மூலமே கிடைக்கிறது.
இந்த
வளர்சிதை மாற்றத்தால் நம் உடலில் இரண்டு மாற்றங்கள் பிரதானமாக நடக்கிறது. ஓன்று,
உடலில் உள்ள பழைய உயிரணுக்கள் வெளியேற்றப்படுகின்றன, இரண்டு, புதிய .உ.யிரணுக்கள்
உருவாக்கின்றன. இவையே மனிதனுக்கு வளர்ச்சி கொடுக்கிறது. உணவே நம் உடலுக்கு
புதியவற்றை உருவாக்கவும், பழையவற்றை வெளியேற்றவும் சக்தி கொடுக்கிறது.
இந்த
சக்தி நமக்கு கிடைக்காவிட்டால் நம்மால் செயல்பட முடியாது. எனவே, உணவே மருந்து –
இதை மறக்க வேண்டாம். உணவில்லாமல் உயிர் வாழ முடியாது.
உணவுப்
பழக்கம் ஓருவரின் குணத்தை நிரணயிக்கிறது. நல்ல சுத்தமான மற்றும் தரமான உணவு
உட்கொள்பவர், தூய்மையான எண்ணங்களைக் கொண்டவராக மாறுகிறார். நல்ல சிந்தனை உள்ளவராக
திகழ்கிறார். அமைதியான வாழ்வை வாழ்கிறார்.
ஸ்வாமி
சிவானந்தா அவர்கள் கூறிய கருத்து, “ஓரு மனிதன் உணவு உட்கொள்ளாமல்
பத்து நாட்கள் இருந்தால் அவன்/அவள் உயிர் வாழ முடியும். ஆனால்
கண் இருந்தும் பார்வை தெரியாமலும், காது இருந்து கேட்காமலும், நல்ல சிந்தனை செய்ய
இயலாமலும் தான் வாழ முடியும்”. ஏனென்றால் உணவு இல்லாமல்
நம்மால் செயல்பட முடியாது. ஆரோக்கியமான உணவே ஆரோக்கியமான வாழ்வு.
ஆரோக்கியமாக
வாழுங்கள்
புன்னகையுடன்
இருங்கள்
மீண்டும்
சந்திப்போம்........