11 November 2021

108 திவ்ய தேசங்கள் - 1

 

108 திவ்ய தேசங்கள்

வைணவத் திருத்தலங்களே திவ்ய தேசங்கள்  என வழங்கப்படுகிறது. நாலாயிரதிவ்ய பிரபந்தத்தில் பாடப் பெற்ற திருத்தலங்களை திவ்யதேசங்கள் என அழைக்கப்படுகின்றது. நாலாயிரதிவ்ய பிரபந்தத்தில் ஆழ்வார்களால் திவ்ய தேசங்களைப் பற்றி இடம் பெற்ற பாடல்களே மங்களாசாசனம் அழைக்கப்படுகின்றது.




   இவ்வாறு மங்களாசாசனம் பெற்ற திவ்ய தேசங்கள் 108 ஆகும். இந்தியாவில் 105 திருத்தலங்களும், நேபாளத்தில் 1 திருத்தலமும், மற்ற இரு திருத்தலங்கள் விண்ணுலகிலும் இருக்கின்றன.

     வைஷ்ணவ வழிபாட்டு முறைப்படி, இந்த திவ்ய தேசங்களுக்குச் சென்று, அந்தந்த தலத்திற்கு உரிய பாசுரங்களைப் பாடி பெருமாளை சேவிப்பது என்பது வைஷ்ணவர்களின் முக்கியமான வழிபாடாகும்.

இவ்வாறு மங்களாசாசனம் பெற்ற திவ்ய தேசங்கள் 108 ஆகும். இந்தியாவில் 105 திருத்தலங்களும் நேளத்தில் 1 திருத்தலமும்மற்ற இரு திருத்தலங்கள் விண்ணுலகிலும் இருக்கின்றன.

வைஷ்ணவ வழிபாட்டு முறைப்படிஇந்த திவ்ய தேசங்களுக்குச் சென்றுஅந்தந்த தலத்திற்கு உரிய பாசுரங்களைப் பாடி பெருமாளை சேவிப்பது என்பது வைஷ்ணவர்களின் முக்கியமான வழிபாடாகும்


திவ்ய தேசங்களின் வகைகள்

சோழ நாட்டு திருப்பதிகள் - 40

நடு நாட்டு திருப்பதிகள் - 2

தொண்டை நாட்டு திருப்பதிகள் - 22

வட நாட்டு திருப்பதிகள் - 11

மலை நாட்டுத் திருப்பதிகள்  - 13

பாண்டிய நாட்டுத் திருப்பதிகள் - 18

நில உலகில் காணமுடியாத திருப்பதிகள் - 2 ஆகும்.

இவற்றில்

தமிழ்நாடு - 84 

கேரளா - 11 

ஆந்திரா - 2 

உத்தரப்பிரதேசம் - 4 

உத்தராகண்ட்     - 3 

குஜராத் - 1 

நேபாளம் - 1 

விண்ணுலகம்    - 2 

சோழ நாட்டு திவ்ய தேசங்கள் – 40

01. திருவரங்கம் - ஸ்ரீரங்கம்  

பூலோக வைகுண்டம்,

கம்பராமாயணம் அரங்கறிய இடம். 

திருச்சி  தமிழகம்

மூலவர்

ஸ்ரீ ரங்கநாதர்நம்பெருமாள்

ஸ்ரீ பெரிய பெருமாள்,

ஸ்ரீ அழகியமணவாளன்  புஜங்க சயனம்

தாயார்

ஸ்ரீ ரங்கநாயகி

ஸ்ரீ ரங்க நாச்சியார்

தீர்த்தம்

சந்திர புஷ்கரணி

தல விருட்சம்

புன்னை மரம்

விமானம்

ப்ரணவாக்ருதி விமானம் 230 அடி உயரம்

மங்களாசாசனம்

பெரியாழ்வார்

ஆண்டாள்

குலசேகராழ்வார்

தொண்டரடிப்பொடியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பொய்கையாழ்வார்

பூதத்தாழ்வார்

பேயாழ்வார்

திருமழிசையாழ்வார்

நம்மாழ்வார்

திருப்பானாழ்வார்

– ஆகியோர்களால் மொத்தம் 247 பாசுரங்கள் பாடப்பெற்றது

 02  திருக்கோழிஉறையூர்

திருச்சி  தமிழகம்.

கமலவள்ளித் தாயாருக்கும்ஸ்ரீ ரங்கநாதருக்கும் திருமணம் நிகழ்ந்த தலம்.

மூலவர்

ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள்

நின்ற திருக்கோலம்

தாயார்

ஸ்ரீ கமலவள்ளி நாச்சியார்

தனிச் சன்னதி இல்லை. 

பெருமாளுக்கு அருகிலேயே நின்ற திருக்கோலம்

தீர்த்தம்

கல்யாணத் தீர்த்தம் 

குடமிருட்டி ஆறு

தல விருட்சம்

புன்னை மரம்

விமானம்

கல்யாண விமானம்

மங்களாசாசனம் 2

திருமங்கையாழ்வார் - 1 பாசுரம்

குலசேகராழ்வார்  - 1 பாசுரம்

 03. திருக்கரமாபனூர் 

உத்தமர் கோயில்  

பிட்சாண்டார் கோயில் 

மணச்சநல்லூர்  துறையூர் சாலை

திருச்சி  தமிழகம்

திருச்சியிலிருந்து 6 கிமீ  தூரத்தில் உள்ளது.

திருமூர்த்தி தலம் எனப்படும்.

ஸ்ரீ சிவன்ஸ்ரீ பிரம்மாவிற்கும் சன்னதி உண்டு.

ஸ்ரீ சரஸ்வதி தேவிக்கும் சன்னதி உண்டு.

மூலவர்

ஸ்ரீ புருஷோத்தமன்  புஜங்க சயனம்

தாயார்

ஸ்ரீ பூர்ணவல்லி  ஸ்ரீ பூர்வாதேவி

தீர்த்தம்

கதம்ப தீர்த்தம்

தல விருட்சம்

வாழை மரம்

விமானம்

உத்யோக விமானம்

மங்களாசாசனம்

திருமங்கையாழ்வார் 1 பாசுரம்

 

04. திருவெள்ளறை

திருச்சி  தமிழகம்.

திருச்சியிலிருந்து 20 கிமீ துறையூர் போகும் சாலையில் உள்ளது.

மூலவர்

ஸ்ரீ புண்டரீகாட்சன்  நின்ற திருக்கோலம்

தாயார்

ஸ்ரீ பங்கயச் செல்வி 

ஸ்ரீ செண்பகச் செல்வி           

தீர்த்தம்

மொத்தம் 7 தீர்த்தங்கள்

1 - திவ்ய தீர்த்தம்  

2 - வராஹ தீர்த்தம் 

3 - சந்திர புஷ்கரணி 

4 - பத்ம தீர்த்தம்

5 - புஷ்கல தீர்த்தம்

6 - மணிகர்ணிகா தீர்த்தம்

7 - குச தீர்த்தம்

தல விருட்சம்

வில்வம்

விமானம்

விமலாகிருதி விமானம்

மங்களாசாசனம்

பெரியாழ்வார் 24 பாசுரங்கள்

 05. திருஅன்பில்

அன்பில்திருச்சி  தமிழகம்.

திருச்சி  கல்லணை  கும்பகோணம் சாலையில் உள்ளது.

மூலவர்

அன்பில் ஸ்ரீ சுந்தர்ராஜப்பெருமாள்  

ஸ்ரீ வடிவழகியநம்பி  புஜங்க சயனம்

தாயார்

ஸ்ரீ அழகியவல்லி நாச்சியார்

தீர்த்தம்

மண்டூக புஷ்கரணிகொள்ளிடம்

தல விருட்சம்

தாழம்பூ

விமானம்

தாரக விமானம்

மங்களாசாசனம்

திருமழிசையாழ்வார் 1 பாசுரம்

           

06. திருப்பேர் நகர் 

கோயிலடிதிருச்சி  தமிழகம்.

திருச்சியிலிருந்து 24 கிமீ. 

பஞ்சரங்கத் தலங்களில் இதுவும் ஓன்று.  

பஞ்சரங்கத் தலங்கள்

1. ஆதிரங்கம்  ஸ்ரீரங்கப்பட்டிணம்  மைசூர்;

2. அப்பலரங்கம்  திருப்பேர் நகர்;

3. மத்திய ரங்கம்  ஸ்ரீரங்கம்;

4. சதுர்த்தரங்கம்  கும்பகோணம்;

5. பஞ்சரங்கம்  திருஇந்தளூர்  மயிலாடுதுறை.

மூலவர்

ஸ்ரீ அப்பக்குடத்தான்  

ஸ்ரீ அப்பல ரங்கநாதர்  புஜங்க சயனம்

தாயார்

ஸ்ரீ இந்திராதேவி 

ஸ்ரீ கமலவல்லி  

தீர்த்தம்

இந்திர தீர்த்தம்

தல விருட்சம்

புரசமரம் - பாலாசமரம்

விமானம்

இந்திர விமானம்

மங்களாசாசனம்

நம்மாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரியாழ்வார் 

திருமழிசையாழ்வார் 

– ஆகியோர்களால் மொத்தம் 33 பாசுரங்கள் பாடப்பெற்றது

07.  திருக்கண்டியூர்

தஞ்சாவூர்தமிழகம்.

தஞ்சாவூரிலிருந்து திருவையாறு செல்லும் சாலையில் 9 கிமீ தூரத்தில் உள்ளது.

மூலவர்

ஸ்ரீ ஹர சாப விமோசன பெருமாள் 

நின்ற திருக்கோலம்.

தாயார்

ஸ்ரீ கமலவல்லி நாச்சியார்

தீர்த்தம்

கபால மோக்ஷ புஷ்கரணி

விமானம்

கமலாக்ருதி விமானம்

மங்களாசாசனம்

திருமங்கையாழ்வார் 1 பாசுரம்

 08. திருக்கூடலூர்

ஆடுதுறைப் பெருமாள் கோயில் 

கூடலூர்-ஆடுதுறை

கும்பகோணம்தமிழகம்.

கும்பகோணம்  திருவையாறு செல்லும் சாலையில் 11 கிமீ உள்ளது.

மூலவர்

ஸ்ரீ வையங்காத்தப் பெருமாள்  

ஸ்ரீ ஜகத்ரட்சகன் 

தாயார்

ஸ்ரீ பத்மாசனிவல்லி தாயார்

ஸ்ரீ புஷ்பவல்லி தாயார்      

தீர்த்தம்

சக்கர தீர்த்தம் 

காவிரி ஆறு

தல விருட்சம்

பலாமரம்

விமானம்

சுத்த சத்வ விமானம்

மங்களாசாசனம்

திருமங்கையாழ்வார் 10 பாசுரங்கள்

09. திருகவித்தலம் 

கபிஸ்தலம்,

கும்பகோணம்தமிழகம்.

கும்பகோணம்  திருவையாறு செல்லும் சாலையில் பாபநாசத்திலிருந்து 3 கிமீ உள்ளது.

மூலவர்

ஸ்ரீ கஜேந்திர வரதர்  புஜங்க சயனம்

தாயார்

ஸ்ரீ ரமாமணிவல்லி 

ஸ்ரீ பொற்றாமரையாள்         

தீர்த்தம்

கஜேந்திர புஷ்கரணி 

கபில தீர்த்தம்

தல விருட்சம்

மகிழம்பூ மரம்

விமானம்

க்கநாக்ருத விமானம்

மங்களாசாசனம்

திருமங்கையாழ்வாரால் 1 பாசுரம்

 10. திருபுள்ளம் பூதங்குடி

கும்பகோணம்தமிழகம்.

சுவாமிமலையிலிருந்து 5 கிமீ

1000 - 2000 வருடங்கள் பழமையான திருத்தலம்.

மூலவர்

ஸ்ரீ வல்வில் ராமன்  புஜங்க சயனம்

தாயார்

ஸ்ரீ பொற்றாமறையாள் 

ஸ்ரீ ஹேமாம்புஜவல்லி   

தீர்த்தம்

ஜடாயு தீர்த்தம் 

கிருத்ர தீர்த்தம்

தல விருட்சம்

புன்னைமரம்

விமானம்

சோபன விமானம்

மங்களாசாசனம்

திருமங்கையாழ்வார் 10 பாசுரங்கள்

 11. திருஆதனூர்

ஆண்டளக்கும் ஐயன் கோயில்

 ஆதனூர்கும்பகோணம்தமிழகம்.

கும்பகோணம் 8 கிமீசுவாமிமலை 3 கிமீ.

மூலவர்

ஸ்ரீ ஆண்டளக்குமய்யன் 

தலையின் கீழ் மரக்கால்

இடது கரத்தில் ஓலை எழுத்தாணியுடன்

பள்ளிக்கொண்ட திருக்கோலம்.

தாயார்

ஸ்ரீரங்கநாயகி

ஸ்ரீ கமலவாசினி

தீர்த்தம்

சந்திர தீர்த்தம்

தல விருட்சம்

புன்னைமரம்

விமானம்

ப்ரணவ விமானம்

மங்களாசாசனம்

திருமங்கையாழ்வார் 1 பாசுரம்.

 12. சாரங்கபாணி சுவாமி கோயில் 

திருக்குடந்தை  கும்பகோணம்தமிழகம்.

1000 - 2000 வருடங்கள் பழமையான திருத்தலம்

மூலவர்

ஸ்ரீ     சாரங்கபாணி  

ஸ்ரீ ஆராவமுதன்  உத்தியோக சயனம்

தாயார்

கோமளவல்லி        

தீர்த்தம்

ஹேமவல்லி புஷ்கரணி 

காவேரி ஆறு

அரசலாறு

விமானம்

வைதிக விமானம்

மங்களாசாசனம்

பெரியாழ்வார் 

ஸ்ரீ ஆண்டள் 

பேயாழ்வார் 

திருமழிசையாழ்வார் 

பூதத்தாழ்வார் 

நம்மாழ்வார் 

திருமங்கையாழ்வார் 

– ஆகியோர்களால் மொத்தம் 51 பாசுரங்கள் பாடப்பெற்றது

13.திருவிண்ணகர்

ஒப்பிலியப்பன் கோயில் 

கும்பகோணம்தமிழகம்.

கும்பகோணத்திலிருந்து 5 கிமீ.

மூலவர்

ஸ்ரீ ஒப்பிலியிப்பன்  ஸ்ரீநிவாச பெருமாள்  நின்ற திருக்கோலம்   மாம் ஏகம் சரணம் வ்ரஜ  என்ற சரம ஸ்லோகப் பகுதி பெருமாளின் வலது கரத்தில் வைரங்களால் பொறிக்கப்பட்டுள்ளது.

தாயார்

ஸ்ரீ பூமிதேவி  ஸ்ரீதேவி  தனிச் சன்னதி கிடையாது.

பெருமாளுக்கு அருகிலேயே மண்டியிட்டு வணங்கும் கோலம்.

தீர்த்தம்

அகோத்ர புஷ்கரணி

விமானம்

சுத்தானந்த விமானம்

மங்களாசாசனம்

திருமங்கையாழ்வார் 

பேயாழ்வார் 

நம்மாழ்வார் 

– ஆகியோர்களால் மொத்தம் 47 பாசுரங்கள் பாடப்பெற்றது

14. திருநரையூர் 

நாச்சியார்கோயில் 

கும்பகோணம்தமிழகம்.

கும்பகோணத்திலிருந்து திருவாரூர் செல்லும் சாலையில் 9 கிமீ உள்ளது.

1000 - 2000 வருடங்கள் பழமையான திருத்தலம்

மூலவர்

ஸ்ரீநிவாசன் 

திருநறையூர் நம்பி 

ஸ்ரீ வாசுதேவன்  நின்ற திருக்கோலம்

தாயார்

ஸ்ரீ வஞ்சுலவல்லி  

ஸ்ரீ நம்பிக்கை நாச்சியார்                     

தீர்த்தம்

மணிமுக்தா புஷ்கரணி  

சங்கர்ஷன தீர்த்தம்  

ப்ரத்யுணம் தீர்த்தம் 

சம்ப தீர்த்தம்

தல விருட்சம்

மகிழமரம்

விமானம்

ஹேம விமானம்

மங்களாசாசனம்

திருமங்கையாழ்வார்  110 பாசுரங்கள்.

 15. திருச்சேறை சாரநாதப்பெருமாள் கோயில் 

பஞ்சார க்ஷேத்தரம் 

கும்பகோணம்தமிழகம்.

கும்பகோணம்  திருவாரூர் சாலையில் - நாச்சியார் கோயிலிருந்து 5 கிமீ உள்ளது.

500 1000 வருடங்கள் பழமையான திருத்தலம்

மூலவர்

ஸ்ரீ சாரநாதன்  நின்ற திருக்கோலம்.

தாயார்

ஸ்ரீ சாரநாயகி

ஸ்ரீ பஞ்சலக்ஷ்மி 

தீர்த்தம்

சார புஷ்கரணி

விமானம்

சார விமானம்

மங்களாசாசனம்

திருமங்கையாழ்வார்  13 பாசுரங்கள்.                 

 16. திருக்கண்ணமங்கை  

கிருஷ்ண மங்கள க்ஷேத்தரம்

கும்பகோணம் தமிழகம்.

கும்பகோணம் திருவாரூர் சாலையில் உள்ளது. திருவாரூருக்கு 8 கிமீ முன்பாக உள்ளது.         

2000 3000 வருடங்கள் பழமையான திருத்தலம்

மூலவர்

ஸ்ரீ பக்தவத்சல பெருமாள் நின்ற திருக்கோலம்

தாயார்

ஸ்ரீ அபிஷேகவல்லி                  

தீர்த்தம்

தர்சன புஷ்கரணி

தல விருட்சம்

மகிழ மரம்

விமானம்

உத்பல விமானம்

மங்களாசாசனம்

திருமங்கையாழ்வார் 14 பாசுரங்கள்

17.  திருக்கண்ணபுரம்  

சப்த புண்ணியத் தலம்

சீர்காழி தமிழகம்.

பஞ்ச கிருஷ்ணத் தலம்:

1.திருக்கண்ணமங்கை

2.திருகண்ணப்புரம்

3.கபிஸ்தலம்

4.திருகோவிலூர்

5.திருக்கண்ணங்குடி.

நாகபட்டினத்திலிருந்து நன்னிலம் சாலையில் திருப்புகலூர் என்ற இடத்திலிருந்து 1.5 கிமீ தூரத்தில் உள்ளது.

மூலவர்

ஸ்ரீ சௌரிராஜ பெருமாள்  

ஸ்ரீ நீலமேகப் பெருமாள் - நின்ற திருக்கோலம்

தாயார்

ஸ்ரீ கண்ணபுரநாயகி     

தீர்த்தம்

நித்ய புஷ்கரணி

விமானம்

உத்பலாவதக விமானம்

மங்களாசாசனம்

பெரியாழ்வார்

ஸ்ரீ ஆண்டாள்

குலசேகராழ்வார்

திருமங்காயாழ்வார்

நம்மாழ்வார்

– ஆகியோர்களால் மொத்தம் 128 பாசுரங்கள் பாடப்பெற்றது

18. திருக்கண்ணங்குடி

சீர்காழி தமிழகம்.

நாகபட்டினத்திலிருந்து திருவாரூர் சாலையில், சிக்கல் தாண்டி ஆழியூர் என்ற இடத்திலிருந்து 1 கிமீ தூரத்தில் உள்ளது.

 பஞ்ச கிருஷ்ணத் தலம்:

1.திருக்கண்ணமங்கை

2.திருகண்ணப்புரம்

3.கபிஸ்தலம்

4.திருகோவிலூர்

5.திருக்கண்ணங்குடி.

மூலவர்

ஸ்ரீ லோகநாத பெருமாள்,

ஸ்ரீ ஸ்யாமளமேனிப் பெருமாள்

நின்ற திருக்கோலம்

தாயார்

ஸ்ரீ லோகநாயகி

தீர்த்தம்

ராவணத் தீர்த்தம்

தல விருட்சம்

மகிழ மரம்

விமானம்

உத்பல விமானம்

மங்களாசாசனம்

திருமங்கையாழ்வார் 10 பாசுரங்கள்

 19. திருநாகை

நாகப்பட்டினம்  தமிழகம்.

1000 2000 வருடங்கள் பழமையான திருத்தலம்.

மூலவர்

ஸ்ரீ நீலமேகப் பெருமாள்

நின்ற திருக்கோலம்

வீற்றிருந்த பெருமாள் என்று அமர்ந்த திருக்கோலம்

பள்ளிக் கொண்ட ஸ்ரீரங்கநாதன்

என்ற நின்ற, அமர்ந்த, கிடந்த இந்த மூன்று திருக்கோலங்களில் பெருமாள் அருள்புரிகிறார்.

உத்சவர் 

ஸ்ரீ சௌந்தர்யராஜன்

தாயார்

ஸ்ரீ சௌந்தர்யவல்லி  

தீர்த்தம்

சார புஷ்கரணி

விமானம்

சௌந்தர்ய விமானம்

மங்களாசாசனம்

திருமங்கையாழ்வார் 10 பாசுரங்கள்.

 20.

1. தஞ்சை மாமணிக்கோயில்

2. மணிக்குன்றம்

3. தஞ்சையாளி நகர்

மொத்தம் இந்த மூன்று திருத்தலங்கள் சேர்ந்து ஓரு திருத்தலமாக உள்ளது. தஞ்சை வெண்ணாற்றங்கரையில் உள்ளது. மூன்றும் அருகருகே உள்ளது.

1. தஞ்சை மாமணிக்கோயில்

தஞ்சை மாமணக் கோயில்

தஞ்சை - தமிழகம்

மூலவர்

ஸ்ரீ நீலமேகப் பெருமாள் வீற்றிருந்த திருக்கோலம்

தாயார்

ஸ்ரீ செங்கமலவல்லி

தீர்த்தம்

அம்ருத தீர்த்தம்

தல விருட்சம்

மகிழ மரம்

விமானம்

சௌந்தர்ய விமானம்

மங்களாசாசனம்

திருமங்கையாழ்வார்

பூதத்தாழ்வார்

நம்மாழ்வார்

– ஆகியோர்களால் மொத்தம் 5 பாசுரங்கள் பாடப்பெற்றது

2. மணிக்குன்றம்

மணிக்குன்றம், தஞ்சை - தமிழகம்

மூலவர்

ஸ்ரீ மணிக்குன்றப் பெருமாள்

வீற்றிருந்த திருக்கோலம்

தாயார்

ஸ்ரீ அம்புஜவல்லி

தீர்த்தம்

ஸ்ரீராம தீர்த்தம்

தல விருட்சம்

மகிழ மரம்

விமானம்

மணிக்கூட விமானம்

மங்களாசாசனம்

திருமங்கையாழ்வார்

பூதத்தாழ்வார்

நம்மாழ்வார்

– ஆகியோர்களால் மொத்தம் 5 பாசுரங்கள் பாடப்பெற்றது

3. தஞ்சையாளி நகர்

தஞ்சையாளி நகர், தஞ்சை - தமிழகம்

மூலவர்

ஸ்ரீ நரசிம்மர் வீற்றிருந்த திருக்கோலம்

தாயார்

ஸ்ரீ தஞ்சை நாயகி

தீர்த்தம்

சூர்ய புஷ்கரணி

ஸ்ரீராம தீர்த்தம்

தல விருட்சம்

மகிழ மரம்

விமானம்

வேத சுந்தர விமானம்

மங்களாசாசனம்

திருமங்கையாழ்வார்

பூதத்தாழ்வார்

நம்மாழ்வார்

– ஆகியோர்களால் மொத்தம் 5 பாசுரங்கள் பாடப்பெற்றது

 21. திருநந்திபுர விண்ணகரம்

நந்திபுரம்

நாதன் கோயில்

கும்பகோணம் – தமிழகம்.

கும்பகோணத்திலிருந்து 5 கிமீ தூரத்தில் உள்ளது.

1000 2000 வருடங்கள் பழமையான திருத்தலம்

மூலவர்

ஸ்ரீ ஜகந்நாதர் வீற்றிருந்த திருக்கோலம்

மேற்கு நோக்கி அருள்புரியும் திருக்கோலம்.

தாயார்

 ஸ்ரீ செண்பகவல்லி தாயார்

தீர்த்தம்

நந்தி தீர்த்தப் புஷ்கரணி

தல விருட்சம்

செண்பக மரம்

விமானம்

மந்தார விமானம்

மங்களாசாசனம்

திருமங்கையாழ்வார் 10 பாசுரங்கள்.

22. திருவெள்ளியங்குடி  

கும்பகோணம் – தமிழகம்.

கும்பகோணத்திலிருந்து அணைக்கரை சாலையில், சேங்கனூர் என்ற இடத்திலிருந்து 1 கிமீ தூரத்தில் உள்ளது. சுக்கிரன் தலமாகவும் உள்ளது.

மூலவர்

ஸ்ரீ கோலவில்லி ராமர்  

ஸ்ரீ சீராப்பதி நாதன் – புஜங்க சயனம்

உத்சவர் 

ஸ்ரீ ஷ்ருங்கார சுந்தரர்

தாயார்

ஸ்ரீ மரகதவல்லி தாயார்

தீர்த்தம்

சுக்ர தீர்த்தம்

இந்திர தீர்த்தம்.

தல விருட்சம்

செவ்வாழை மரம்

விமானம்

புஷ்கலா வர்த்தக விமானம்

மங்களாசாசனம்

திருமங்கையாழ்வார் 10 பாசுரங்கள்.

23. திருவழுந்தூர்

தேரழுந்தூர் 

ஆமருவியப்பன் கோயில்,

குத்தாலம், நாகப்பட்டினம்தமிழகம்.

கும்பகோணம் மயிலாடுதுறை சாலையில் உள்ளது.

கம்பர் பிறந்த ஊர்.

1000 2000 வருடங்கள் பழமையான திருத்தலம்.

மூலவர்

ஸ்ரீ தேவாதிராஜன் 

ஸ்ரீ ஆமருவியப்பன் நின்ற திருக்கோலம்

தாயார்

ஸ்ரீ செங்கமலவல்லி தாயார்

தீர்த்தம்

காவிரி தீர்த்தம்

தர்சன புஷ்கரணி

விமானம்

கருட விமானம்

மங்களாசாசனம்

திருமங்கையாழ்வார் 45 பாசுரங்கள்.

24. திருச்சிறுபுலியூர் 

தலசயனப்பெருமாள் கோயில்,

சீர்காழி - தமிழகம்.

மயிலாடுதுறை திருவாரூர் செல்லும் சாலையில் கொல்லுமாங்குடியிலிருந்து 3 கிமீ உள்ளது.

கும்பகோணம் காரைக்கால் சாலை வழியாகவும் கொல்லிமாங்குடி செல்லலாம். நாக தோஷ நிவர்த்தித் தலம்.

1000 2000 வருடங்கள் பழமையான திருத்தலம்.

மூலவர்

ஸ்ரீ ஜலசயனப் பெருமாள்

ஸ்ரீ அருள்மாகடல் அமுதன் புஜங்க சயனம்

தாயார்

ஸ்ரீ திருமாமகள் நாச்சியார்

தீர்த்தம்

மானச புஷ்கரணி

அனந்தசரஸ்

தல விருட்சம்

வில்வம்

விமானம்

நந்த வர்தண விமானம்

மங்களாசாசனம்

திருமங்கையாழ்வார் 10 பாசுரங்கள்.

25. தலைச்சங்காடு  

தலைச்சங்க நாண்மதியம்  

சீர்காழி தமிழகம்.

மூலவர்

ஸ்ரீ நாண்மிதியப்பெருமாள்

ஸ்ரீ வெண்சுடர் பெருமாள் நின்ற திருக்கோலம்.

உத்சவர்

ஸ்ரீ வசுந்தர பெருமாள்.

தாயார்

ஸ்ரீ தலைச்சங்க நாச்சியார்

ஸ்ரீ செங்கமலவல்லி

தீர்த்தம்

சந்திர புஷ்கரணி

விமானம்

சந்திர விமானம்

மங்களாசாசனம்

திருமங்கையாழ்வார் 11 பாசுரங்கள்.

 26. திருஇந்தளூர் 

மயிலாடுதுறை – தமிழகம்.

சந்திரன் தோஷம் நீங்கிய தலம்.

1000 2000 வருடங்கள் பழமையான திருத்தலம்.

மூலவர்

ஸ்ரீ பரிமள ரங்கநாதர்

ஸ்ரீ சுகந்தவனநாதன் - வீர சயனம்.

தாயார்

ஸ்ரீ பரிமள நாயகி

ஸ்ரீ புண்டரீகவல்லி

ஸ்ரீ சந்திரசாப விமோசனவல்லி

தீர்த்தம்

இந்து புஷ்கரணி

விமானம்

வேத சக்கர விமானம்

மங்களாசாசனம்

திருமங்கையாழ்வார் 11 பாசுரங்கள்.

 27. திருக்கவளம்பாடி

திருநாங்கூர் 

சீர்காழி தமிழகம்.

சீர்காழி தரங்கம்பாடி சாலையில் 9 கிமீ தூரத்தில் உள்ளது.

இந்த தலத்தில் மட்டும் 6 திவ்யதேசங்களும்2 கிமீ சுற்றளவில் 5 திருத்தலங்கள் உள்ளன. இந்த 11 திருத்தலங்களும் சேர்ந்து திருநாங்கூர் திவ்யதேசம் என அழைக்கப்படுகிறது.

திருநாங்கூர் திவ்யதேசம்

1. திருக்கவளம்பாடி

2. திருஅரிமேய விண்ணகரம்

3. திருவண்புருட்டோத்தமம்

4. திருசெம்பொன்செய் கோயில்

5. திருமணிமாடக் கோயில்

6. திருவைகுந்த விண்ணகரம்

7. திருத்தேவனார்த் தொகை

8. திருத்தெற்றியம்பகை

9. திருமணிக்கூடம்

10. திருவெள்ளக்குளம்

11. திருப்பார்த்தன்பள்ளி

மூலவர்

ஸ்ரீ கோபாலகிருஷ்ணப் பெருமாள்  

ஸ்ரீ ராஜகோபாலன் நின்ற திருக்கோலம்

தாயார்

ஸ்ரீ செங்கமல நாச்சியார்

ஸ்ரீ மடவரல் மங்கை தனிச்சன்னதி இல்லை.

விமானம்

ஸ்வியம்பு விமானம்

மங்களாசாசனம்

திருமங்கையாழ்வார் 10 பாசுரங்கள்.

 28. திருக்காழிச்சீராம விண்ணகரம் 

சீர்காழி - தமிழகம்

மூலவர்

ஸ்ரீ திரி விக்கிரமன்

ஸ்ரீ தாடாளன் நின்ற திருக்கோலம்.

தாயார்

ஸ்ரீ லோகநாயகி

தீர்த்தம்

சங்கத் தீர்த்தம்

சக்ரத் தீர்த்தம்

தல விருட்சம்

பலா மரம்

விமானம்

புஷ்கலா வர்த்த விமானம்

மங்களாசாசனம்

திருமங்கையாழ்வார் 10 பாசுரங்கள்.

 29. அரிமேய விண்ணகரம் 

குடமாடுகூத்தர் கோயில்

திருநாங்கூர், சீர்காழி தமிழகம்.

மூலவர்

ஸ்ரீ குடமாடுகூத்தர் வீற்றிருந்தத் திருக்கோலம்.

உத்சவர் 

ஸ்ரீ சதுர்புஜ கோபாலன்

தாயார்

ஸ்ரீ அமிர்தவல்லி தாயார்

ஸ்ரீ அமிர்தகடவல்லி

தீர்த்தம்

அமிர்தத் தீர்த்தம், கோடித் தீர்த்தம்

தல விருட்சம்

பலாச மரம்

விமானம்

உச்சச்ருங்க விமானம்

மங்களாசாசனம்

திருமங்கையாழ்வார் 10 பாசுரங்கள்.

 30. திருவண்புருடோத்தமம்

திருநாங்கூர்

சீர்காழி - தமிழகம்.

மூலவர்

ஸ்ரீ புருஷோத்தம பெருமாள்

தாயார்

ஸ்ரீ புருஷோத்தம நாயகி

தீர்த்தம்

திருப்பாற் கடல்

தல விருட்சம்

வாழை

பலாமரம்

விமானம்

சஞ்சீவி விக்ரஹ விமானம்

மங்களாசாசனம்

திருமங்கையாழ்வார் 10 பாசுரங்கள்.

 31. செம்பொன் செய்கோயில்

திருநாங்கூர், சீர்காழி தமிழகம்.

500 1000 வருடங்கள் பழமையான திருத்தலம்.

மூலவர்

ஸ்ரீ பேரருளாளன் - நின்ற திருக்கோலம்.

உத்சவர் 

ஸ்ரீ செம்பொன்ன ரங்கர்

ஸ்ரீ ஹிரம்பர்

தாயார்

ஸ்ரீ அல்லிமாமலர் நாச்சியார்

ஸ்ரீ ஸ்வேதபுஷ்பவல்லி

தீர்த்தம்

சோம தீர்த்தம்

கனக தீர்த்தம்

விமானம்

கனக விமானம்

மங்களாசாசனம்

திருமங்கையாழ்வார் 10 பாசுரங்கள்.

 32. திருமணிமாடக் கோயில்

திருநாங்கூர்,  சீர்காழி - தமிழகம்.

மூலவர்

ஸ்ரீ நாராயணன்

ஸ்ரீ சாச்வத தீபநாராயணர்  

நந்தா விளக்கு வீற்றிருந்தத் திருக்கோலம்.

தாயார்

ஸ்ரீ புண்டரீகவல்லித் தாயார்

தீர்த்தம்

இந்திர தீர்த்தம்

ருத்ர தீர்த்தம்

விமானம்

ப்ரணவ விமானம்

மங்களாசாசனம்

திருமங்கையாழ்வார் 12 பாசுரங்கள்.

 33. திருவைகுந்த விண்ணகரம் 

திருநாங்கூர், சீர்காழி - தமிழகம்.

1000 2000 வருடங்கள் பழமையான திருத்தலம்.

மூலவர்

ஸ்ரீ வைகுண்டநாதர்

ஸ்ரீ தாமரைக்கண்ணுடையபிரான்

வீற்றிருந்தத் திருக்கோலம்.

தாயார்

ஸ்ரீ வைகுண்டவல்லி

தீர்த்தம்

லக்ஷ்மித் தீர்த்தம்

ஷங்கத் தீர்த்தம்

விரஜா தீர்த்தம்.

விமானம்

அனந்தசத்யவர்த்தக விமானம்

மங்களாசாசனம்

திருமங்கையாழ்வார் 10 பாசுரங்கள்.

 34. திருவாலி - திருநகரி கோயில்கள்

இரண்டும் வேறு வேறு இடங்களில் இருந்தாலும் ஓரே திவ்ய தேசமாக இவை மங்களாசாசனம் செய்யப்பட்டுள்ளன.

திருவாலி

சீர்காழி தமிழகம்.

திருவாலி, சீர்காழி திருவெண்காடு சாலையில் உள்ளது. திருநாங்கூரிலிருந்து என்ற இடத்திலிருந்து 1 கிமீ தூரத்தில் உள்ளது.

மூலவர்

ஸ்ரீ அழகிய சிங்கர்

ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் - வீற்றிருந்தத் திருக்கோலம்.

தாயார்

ஸ்ரீ பூர்ணவல்லி தாயார்

தீர்த்தம்

இலாட்சணத் தீர்த்தம்

விமானம்

அஷ்டாட்சர விமானம்

திருநகரி

சீர்காழி தமிழகம்.

சீர்காழி பூம்புகார் சாலையில் திருவாலியிலிருந்து 5 கிமீ தூரத்தில் உள்ளது.

1000 2000 வருடங்கள் பழமையான திருத்தலம்.

திருமங்கையாழ்வார் அவதரித்த தலம்.

மூலவர்

ஸ்ரீ வேதராஜப் பெருமாள்

ஸ்ரீ வயலாளி மணவாளன்

வீற்றிருந்தத் திருக்கோலம்.

தாயார்

ஸ்ரீ அமிர்தவல்லி தாயார்

மங்களாசாசனம் - திருவாலி மற்றும் திருநகரி

குலசேகராழ்வார் - திருமங்கையாழ்வார் - 42 பாசுரங்கள்

  35. திருத்தேவனார்த் தொகை

கீழச்சாலை, சீர்காழி - தமிழகம்.

திருநாங்கூரிலிருந்து 4 கிமீ தூரத்தில் உள்ளது.

சீர்காழி - திருவெண்காடு சாலையில் உள்ளது.

மூலவர்

ஸ்ரீ தெய்வநாயகப் பெருமாள்

ஸ்ரீ மாதவப் பெருமாள் -  நின்ற திருக்கோலம்.

தாயார்

ஸ்ரீ கடல்மகள் நாச்சியார்

ஸ்ரீ சமுத்ரதனயா

தீர்த்தம்

சோபன தீர்த்தம்

தேவசபா தீர்த்தம்

விமானம்

சோபன விமானம்

மங்களாசாசனம்

திருமங்கையாழ்வார் 10 பாசுரங்கள்.

36. திருத்தெற்றியம்பலம்

பள்ளிக்கொண்டப் பெருமாள் சன்னதி,

திருநாங்கூர், சீர்காழி - தமிழகம்.

500 - 1000 வருடங்கள் பழமையான திருத்தலம்.

மூலவர்

ஸ்ரீ செங்கண்மால் ரங்கநாதர்

ஸ்ரீ லக்ஷ்மிரங்கர் - புஜங்க சயனத் திருக்கோலம்.

உத்சவர் 

ஸ்ரீ செங்கண்மால் பள்ளிக்கொண்ட ரங்கநாதர்

தாயார்

ஸ்ரீ செங்கமலவல்லி

தீர்த்தம்

சூரிய புஷ்கரணி

விமானம்

வேத விமானம்

மங்களாசாசனம்

திருமங்கையாழ்வார் 10 பாசுரங்கள்.

37. திருமணிக்கூடம்

திருநாங்கூர்

சீர்காழி தமிழகம்.

மூலவர்

ஸ்ரீ வரதராஜப் பெருமாள் 

ஸ்ரீ கஜேந்திரவரதன்  

ஸ்ரீ மணிக்கூடநாயகன் - நின்ற திருக்கோலம்

தாயார்

ஸ்ரீதேவி

ஸ்ரீ திருமாமகள் நாச்சியார்

தீர்த்தம்

சந்திர புஷ்கரணி

விமானம்

கனக விமானம்

மங்களாசாசனம்

திருமங்கையாழ்வார் 10 பாசுரங்கள்.

38. திருவெள்ளக்குளம்

தென் திருப்பதி 

அண்ணன் கோயில் 

சீர்காழி தமிழகம்

சீர்காழி தரங்கம்பாடி சாலையில்,

சீர்காழியிலிருந்து 8 கிமீ தூரத்தில் உள்ளது.

2000 3000 வருடங்கள் பழமையான திருத்தலம்.

மூலவர்

ஸ்ரீ அண்ணன் பெருமாள்

ஸ்ரீ நிவாசன்

ஸ்ரீ கண்ணன்

ஸ்ரீ நாராயணன் நின்ற திருக்கோலம்.

தாயார்

ஸ்ரீ அலர்மேல் மங்கை

ஸ்ரீ பத்மாவதி தாயார்

தீர்த்தம்

திருவெள்ளக் களம்

தல விருட்சம்

வில்வம்

பரசு மரம்

விமானம்

தத்வத்யோதக விமானம்

மங்களாசாசனம்

திருமங்கையாழ்வார் 10 பாசுரங்கள்.

 39திருப்பார்த்தன் பள்ளி 

சீர்காழி - தமிழகம்.

திருவெண்காட்டிலிருந்து 3 கிமீ தூரத்தில் உள்ளது.

மூலவர்

ஸ்ரீ தாமரையாள் கேள்வன் நின்ற திருக்கோலம்

தாயார்

ஸ்ரீ தாமரைநாயகி

தீர்த்தம்

கங்கா தீர்த்தம்

விமானம்

நாராயண விமானம்

மங்களாசாசனம்

திருமங்கையாழ்வார் 10 பாசுரங்கள்.

 40. திருச்சித்ரகூடம் 

சிதம்பரம், கடலூர் – தமிழகம்.

1000 2000 வருடங்கள் பழமையான திருத்தலம்.

மூலவர்

ஸ்ரீ கோவிந்தராஜ பெருமாள்

ஸ்ரீ பார்த்தசாரதி        

ஸ்ரீ சக்கரவர்த்தித் திருமகன் யோகசயனம்.

உத்சவர் 

ஸ்ரீ தேவாதி தேவன்

தாயார்

ஸ்ரீ புண்டரீகவல்லி

தீர்த்தம்

புண்டரீகத் தீர்த்தம் உட்பட 12 தீர்த்தங்கள்

விமானம்

சாத்வீக விமானம்

மங்களாசாசனம்

குலசேகராழ்வார்

திருமங்கையாழ்வார்

– ஆகியோர்களால் மொத்தம் 32 பாசுரங்கள் பாடப்பெற்றது

 தரிசனம் தொடரும்.....

மீண்டும் சந்திப்போம்..... நன்றி !

அடுத்த பதிவுக்கு >>108 திவ்ய தேசங்கள் – 1

ஓம் நமோ நாராயணாய !


Featured Post

Aswini Nakshatra

  ASHWINI NAKSHATRAM First Star ranges from degrees 0°00' to 13°20' in the Aries - Mesham sign. It is a collection of 6 stars.

Free website traffic generator